எச்சரிக்கை ..! பேய்மழை  பெய்யுமாம் ..!  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..! 

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை நீடிக்கும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அதன் படி, அடுத்து வரும் 5 நாட்களில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் மிகவும் கனமழை பெய்யும் என்றும், தென் மாநிலங்களை பொறுத்தவரையில் கர்நாடகாவில் மட்டும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், தென்மேற்கு மத்திய அரபி கடலில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


 
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என  எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம்.