தமிழ் நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரனெட்டை தொட்டுள்ளது. ஏற்கனவே 6,7 ஆம் தேதியன்று தமிழகத்தில் அனல் காற்றுடன் பயங்கர வெயில் நிலவும் என நேற்று முன்தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில், இன்றே 100 டிகிரி பாரனெட்டை தொட்டுள்ளது என்றால் நீங்களே பாருங்களேன். ஒவ்வொரு ஆண்டும் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

குமரி முதல் கர்நாடகம் வரை காற்றின் ஈரப்பதம் குறைந்து உள்ளதால்,வெயில் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்றாற்போல், இன்று ஒரே நாளில்,திருத்தணி,சேலம்,வேலூர், மதுரை, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெயில்100 டிகிரியை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதில் குறிப்பாக திருத்தணியில்104 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது, எனவே நாளை மற்றும் நாளை மறுதினம் கூட வெயில் அதிகளவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், அதற்கேற்றவாறு மக்கள் எங்கு சென்றாலும் வாட்டர் பாட்டில், குடை வைத்து இருப்பது நல்லது.