40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அற்புத நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடைசி பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்

மொத்தமாக 48 நாட்களில் ஒரு கோடியே 8 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து இருந்ததாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்தது. குறிப்பிட்ட அந்த 48 நாட்கள் மட்டும் அத்திவரதரை காண்பதற்காக பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வேறுசில மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து வந்ததால் காஞ்சிபுரம் குலுங்கியது. நிறுத்த வாகன நிறுத்த இடமில்லாமல் கோவிலுக்குள் செல்ல முடியாமல் விடியற்காலை முதலில் அலைமோதியது.

பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்க கூட முடியாமல் கூட்டம் கூட்டமாக கும்பல் கும்பலாக உள்ளே சென்றனர். அடித்து பிடித்து ஒரு வழியாக அத்தி வரதரை தரிசனம் செய்து முடித்துவிட்டு வெளியே வந்தனர். இதில் பலரும் மயக்கம் அடைந்தனர். ஒரு சிலர் இறக்கவும் நேரிட்டது. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் அரசு சார்பாக எடுக்கப்பட்டு இருந்தபோதிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடைசி நேரத்தில் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஜகஜோதியாக இருந்த வசந்த மண்டபம் தற்போது கலை இழந்து காணப்படுகிறது. 48 நாட்கள் முடிந்த உடன் கடந்த 18ஆம் தேதி அத்தி வரதரை ஆகமவிதிப்படி அமிர்தசரஸ் குளத்தில் வைத்தனர். அதன்பின்னர் அத்தி வரதர் இருந்த வசந்த மண்டபம் காலியாக உள்ளதால் கலை இழந்து காணப்படுகிறது.