Asianet News TamilAsianet News Tamil

Healthy food for omicron: வேரியன்ட் 'ஓமிக்ரானுக்கு' டாட்டா பாய் பாய்... சொல்லும் உணவுகள்...!!

தொற்றுநோய்களின் போது உணவு விஷயத்தில் கவனமாக இருங்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

Healthy food for omicron affected people
Author
Chennai, First Published Jan 26, 2022, 8:23 AM IST

கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு வரும் தங்கள் உடல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெரும்பாலும் நுரையீரல், சுவாசப்பாதைகளை கொரோனா வைரஸ் தாக்குகிறது. நமது உடலில் இரும்புச் சத்துக் குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் அளவு குறையும் ஆபத்து உள்ளது. மேலும், ரத்த சிவப்பணுக்களில் ஆக்சிஜன் குறையும் போது, செயற்கை சுவாசம தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் கொடுக்காவிட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. 

Healthy food for omicron affected people

எனவே, உங்கள் உணவில் சிறிய மாற்றங்களுடன் உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவசியமாகும். உணவுப் பொருட்களின் கலவையானது வைட்டமின்கள், தாதுக்கள், நல்ல தரமான புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை உங்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்கும். இந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

இருப்பினும், ஒமிக்ரானின் அறிகுறிகளை சுலபமாக போக்க உதவும் சில உணவுகள் உள்ளன. சூப்கள், மசாலா கலவைகள் கொண்ட சூடான பானங்கள் தொண்டை புண்ணை அதிகரித்துவிடும். 

உணவை விழுங்குவது கடினமாக இருக்கும்போது கிச்சடி அல்லது கஞ்சி போன்ற மென்மையான அல்லது உணவுகளை சாப்பிட வேண்டும்.வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் போன்ற பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம். 

புரதங்கள் நிரம்பிய முட்டை, தயிர், பால், சோயாமில்க், பனீர், கோழி, மீன், பருப்பு வகைகள் மற்றும் முழு பருப்பு வகைகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளவும். வைட்டமின் சி நிரம்பிய நெல்லிக்காய், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களை தொடர்ந்து சாப்பிடவும்.

கொண்டைக்கடலை, முந்திரி, முட்டை, கீரை, பருப்பு, பால் என துத்தநாக சத்துள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும். அதேபோல, அக்ரூட் பருப்புகள், மீன், ஆளிவிதை, கொட்டைகள் உட்பட ஒமேகா-3 கொழுப்புகள் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடவும். 

உணவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம்உள்ள உணவுகளை சேர்த்து கொள்வது. இது எளிதில் ஜீரணிக்கக்கூடியது. இதனுடன், இதில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் இது வயிற்றில் லேசானது.

ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கும். பருவகால மற்றும் வெவ்வேறு நிறங்கள் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களும் தாதுக்களும் இருக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், உலர் இஞ்சி (Dry Ginger) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே 3 கிராம் உலர் இஞ்சி மற்றும் நாட்டுச் சர்க்கரையை சம அளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு பிரச்சனை நீங்கும்.
 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் வறுத்த சீரகத்தையும் உட்கொள்ளலாம். இதனுடன் வேண்டுமானால் கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடலாம். அல்லது வெட்டிய பழங்களின் மேல் இட்டும் இதை உட்கொள்ளலாம். 

சரியான ஆரோக்கியமான உணவு இதுதான் என்று யாராலும் அறுதியிட்டு உறுதியாக சொல்லிவிட முடியாது. பாதிப்பு மற்றும் இணை நோய்களின் அடிப்படையில் உட்கொள்ளும் உணவும் மாறுபடும். 

Healthy food for omicron affected people

எனவே, கோவிட்-19 சிகிச்சையில் இருப்பவர்கள் அல்லது நோயில் இருந்து குணமடைந்தவர்களுக்கு ஆரோக்கியமான சத்தான உணவைத் திட்டமிடுவதற்கும் தயாரிப்பதற்கும் ஊட்டச்சத்து நிபுணரிடம் கலந்தாலோசியுங்கள்.

மேலும், ஒமைக்கிரனின் அனைத்து அறிகுறிகளையும் கண்டறிந்து, பரிசோதனை செய்து, உரிய சிகிக்சை மேற்கொள்ள வேண்டும். தீவிரம் குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையில் வீட்டில் தனிமை படுத்தி கொள்ள வேண்டும். எனவே, இரண்டு தடுப்பூசி போடுங்கள், முக கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடிங்கள்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios