சர்க்கரை நோயாளிகளே! ஆரோக்கியமான காலை டிபனுக்கு இப்படி இட்லி செய்து சாப்பிடுங்க!

இந்த பதிவில் கம்பு இட்லி செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

healthy breakfast recipes kambu idli recipe in tamil mks

இன்று காலை நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட விரும்பினால் கம்பு இட்லி சிறந்த தேர்வாகும். இப்போது இந்த பதிவில் கம்பு இட்லி செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கம்பு இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
கம்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
புழுங்கல் அரிசி - கால் கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைகேற்ப

கம்பு இட்லி செய்முறை:
கம்பு இட்லி செய்ய முதலில், எடுத்து வைத்த கம்பை நன்றாக கழுவி, சுமார் 4 மணி நேரம் ஊறவையுங்கள். இதனுடன், உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தயம் ஆகியவற்றையும் நன்றாக கழுவி ஊறவையுங்கள். 4 மணி நேரம் கழித்து, இவற்றை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு தனித்தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது, அரைத்த மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து, சுமார் 8 மணிநேரம் புளிக்க வைத்து பின், இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால் கம்பு இட்லி ரெடி!!!

நீங்கள் இந்த மாவில் தோசை செய்யலாம். ஆனால், அதற்கு புழுங்கல் அரிசிக்கு பதிலாக பச்சரிசி பயன்படுத்த வேண்டும். இந்த மாவில் தோசை சுட தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் (அ) நெய் தடவி பொன்னிறமாக இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் கம்பு தோசை ரெடி!! இந்த கம்பு இட்லி மற்றும் தோசைக்கு சைடிஸ் ஆக சட்னி, சாம்பார், கிரேவிகள், மீன் குழம்பு ஆகியவை நன்றாக இருக்கும். 

கம்பின் ஊட்டச்சத்துக்கள்: கம்பில், புரதச்சத்துக்கள், நார்ச்சத்து, கொழுப்பு, கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது.

கம்பு ஆரோக்கிய நன்மைகள்: கம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த தேர்வாகும். அதுபோல மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.

இந்த ரெசிபியை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பார்த்து எப்படி இருந்தது என்று உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios