Diabetic control: சுகர் நோயாளிகள் ஓமிக்ரானிலிருந்து தற்காத்து கொள்ள...ஈஸியான 5 வழிகள்..!!
சுகர் நோயாளிகள் ஓமிக்ரானிலிருந்து தற்காத்து கொள்ள, தேவையான 5 விஷயங்களை கடைபிடிப்பது அவசியம். அவை என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் என்பது, 40 ஐ கடந்த நம் அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக தற்போது மாற துவங்கியுள்ளது. இதனை கட்டுக்குள் வைத்திருப்பது, நம் உடல் நலம் மட்டுமின்றி, எதிர் வரும் தலைமுறையினருக்கும் நல்லது. சர்க்கரை நோய் என்பது உங்க இரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கும் நோயாகும். இரத்த குளுக்கோஸ் அளவானது அதிகமாகும் போது இது கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது. இது உங்கள் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும். சர்க்கரை நோய் இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது.
குறிப்பாக, டைப்-2 சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம் தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கைமுறை என கூறப்படுகிறது. இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 25 வயதிற்குட்பட்ட 4 பேரில் ஒருவருக்கு இந்த டைப்-2 சர்க்கரை நோய் உள்ளது எனவும் கூறப்படுகிறது. உண்மையில், டைப்-2 சர்க்கரை நோய் இப்போது தொற்றுநோய் (epidemic) வரையரைக்குள் வரும் அபாயத்தில் உள்ளது. இதனை எப்படி கட்டுக்குள் வைப்பது என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். இதற்கு நீங்கள் தேவையான 5 ஈஸியான விஷயங்களை கடைபிடிப்பது அவசியம். அவை என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரை அளவினை அடிக்கடி சரிபார்த்தல்:
இதற்கு குளுக்கோமீட்டரை (Glucometer) கையில் வைத்திருப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உண்ணாவிரதம் மேற்கொள்ளும் போதும், உணவுக்குப் பின் மற்றும் சீரற்ற இரத்த சர்க்கரை அளவு ஆகிய நேரங்களில் சரிபார்க்கவும். இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்ஃபோனுடன் இணைக்கப்பட்ட BeatO Curv குளுக்கோமீட்டர் போன்ற புதிய பயன்பாடுகள் இதற்கு அதிகம் உதவும். இது உங்களை பற்றிய முழு தரவுகளையும் குறிப்பெடுத்து கொள்ள வழி செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:
வைட்டமின் A சத்து நிறைந்த பால், பால் பொருள்கள், பப்பாளி, கேரட் போன்ற உணவுப் பொருள்களில் ஒன்றாவது தினமும் சாப்பிட வேண்டும். வைட்டமின் C நிறைந்த தக்காளி, நெல்லிக்காய், கொய்யா, குடை மிளகாய் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட வேண்டும்.
தண்ணீர் :
சர்க்கரை நோயாளிகள் போதுமான அளவு நீரை அவசியம் எடுத்து கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் தட்பவெப்ப நிலையை சீராக வைத்து கொள்ள முடியும். மேலும், நம்மை கொரோனவிலிருந்தும் பாதுகாக்கும்.
புண்கள்:
உடலில் எந்த இடத்தில் புண்கள் இருந்தாலும், உடனடியாக மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம். இல்லையேல் நீண்ட நாட்களுக்கு பிறகு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, முழு காலையும் துண்டிக்கப்பட வேண்டியிருக்கும். எனவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள சாக்ஸ் மற்றும் நேர்த்தியான பேட் உள்ள காலணிகளை அணிந்து நல்ல பாதுகாப்பை தர வேண்டும். மேலும், குளிர் காலத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் தோல் வறண்டு போகும். இதனால் தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
உடற்பயிற்சிகள்:
சர்க்கரை நோயாளிகளுக்கு உடற்பயிற்சி மிக அவசியமானதாகவும். குளிர் மற்றும் ஓமைகிறான் காலங்களில் இதை சரியாக செய்வதற்கு பலருக்கு சிரமமாக இருக்கும். இந்நிலையில் தினமும் 30 நிமிடங்கள் கைகளை நன்றாக அசைத்து நடைப்பயிற்சி செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் யோகா போன்ற பயிற்சிகளையும் செய்து வரலாம்.
எனவே, மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வாழ்த்துக்கள்!