Asianet News TamilAsianet News Tamil

Omega foods: மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள உதவும்... ஒமேகா உணவுகள்...கரோனாவிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்?

ஒமேகா நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால்  கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளாலாம்.

Health benefits of omega foods
Author
Chennai, First Published Jan 24, 2022, 12:58 PM IST

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது நாம் எதிர்கொண்டு வரும் கரோனா சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, மன  நிலையை மேம்படுத்துவதும் அவசியம்.

'பிஸியான' வாழ்க்கைச் சூழலில் எதிர்காலத்தையும், கடந்தகாலத்தையும் நினைத்துக்கொண்டே கடத்தும் நொடிகளின் தொகுப்பே நம்முடைய வாழ்வு. அந்த நொடியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம். எனவே, இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையளவில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன.

Health benefits of omega foods

 உலகை அச்சுறுத்தும் கரோனா பரவல் நமக்கு பல்வேறு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம், தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு, மற்றும் மனதளவிலான பிரச்சனைகள் உள்ளிட்ட தவிர்க்க முடியாத நெகடிவ் சிந்தனைகளை நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. எனவே, நாம் இந்த 2022 ஆம் ஆண்டினை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தேவையற்ற நெகட்டிவ் செயல்களை கைவிடுவது அவசியமாகிறது. ஆரம்பகட்டத்தில் இருந்தே, நாம் அதற்காக  தயாராக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம்.

 இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியின் மூலம் மனநிலையை உற்சாகப்படுத்த ஒமேகா உணவுகள் உதவுவதாக தெரிவித்துள்ளது. அவை என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

ஒமேகா நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, ஒமேகா -6 மற்றும் ஒமேகா -9 நிறைந்த உணவுகளும் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.  

ஒமேகா -6 மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் உங்கள் மனதையும் மனநிலையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதனுடன், அவை முடி, சருமத்தை ஆரோக்கியத்துடன் பராமரிக்கவும், பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. 

அதேசமயம், ஒமேகா -6 மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் (Nutritious Benefits) உடலில் குறைந்துபோவதால், தூக்கமின்மை, மனச்சோர்வு, மன அழுத்தம், சோம்பல் சோர்வு, எலும்புகளில் பிரச்சனை என பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

ஒமேகா -6 மற்றும் 9 நிறைந்துள்ள உணவு வகைகள்:

எள், வால்நட், வேர்க்கடலை, சூரியகாந்தி, ஆலிவ் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களில் ஒமேகா-6 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது தவிர, பூசணி விதைகள் மற்றும் சோயாபீன்களில் ஒமேகா-6 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. 

 முந்திரி-பாதாம் பிரியர்கள் இந்த இரண்டு பொருட்களிலிருந்தும் போதுமான ஒமேகா -9 ஐப் பெறுகிறார்கள். பச்சை காய்கறிகளிலும் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதனுடன், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் அவற்றை உட்கொள்வதன் மூலம் ஏராளமாக கிடைக்கின்றன.

Health benefits of omega foods

அசைவ உணவு உண்பவர்களுக்கு மீனில் இருந்து ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 அதிகம் கிடைக்கிறது. இது வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் நல்ல மூலமாகும். சைவ உணவு உண்பவர்களிடம் வைட்டமின் பி12 குறைபாடு காணப்படுகிறது.

எனவே, நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால், மருத்துவரின் ஆலோசனையின் படி மேற்கூறிய உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios