நல்லெண்ணையை பயன்படுத்தி 'ஆயில் புல்லிங்' காலை நேரத்தில், செய்து வந்தால் உடலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது.
நமது முன்னோர்கள், வாரத்திற்கு ஒருமுறையாவது தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர். ஆனால், இன்றைய நவீன வாழ்வில், உணவு பழக்கம், மன அழுத்தம், மேற்கத்திய கலாசாரம் நம்மை மாற்றிவிட்டன. அதனால், அனைவரும் அழகு நிலையங்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். இதனால், பல கெமிக்கல் பொருட்கள் உபயோகித்து பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்டு வருகிறோம்.

நல்லெண்ணையை பயன்படுத்தி 'ஆயில் புல்லிங்' காலை நேரத்தில், செய்து வந்தால் உடலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. இதனால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
நாளொன்றுக்கு மூன்று முறை, ஆயில் புல்லிங் செய்வதே சிறந்தது. அப்படி, செய்து வந்தால் உடல் ஆரோக்கியமடையும் சைனஸ், ஆஸ்துமா பிரச்சனைகள் சரியாகும். காலை வேளையில் வெறும் வயிற்றுடன் தான் இதைச் செய்வது கூடுதல் நன்மை.
நல்லெண்ணையை பயன்படுத்தி 'ஆயில் புல்லிங்' :
சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி கொப்பளிக்க வேண்டும். பற்களின் இடையில் படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். எண்ணெய் நுரைத்தவுடன் வெளியேற்றிவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
நன்றாக பசி எடுக்கும். செரிமான பிரச்சனைகள் சரியாகும். அமைதியான நீண்ட உறக்கம் கிடைக்கும். நல்ல மனநிலை உண்டாகும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறுவதால் வாய் துர்நாற்றம் இருக்காது. உடல் குளிர்ச்சியாக இருப்பதால் சூடு தணியும்.
ஒற்றை தலைவலி, சைனஸ், தைராய்டு, தோல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், தூக்கமின்மைக்கும் ஆயில் புல்லிங் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.

தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வருவதால் பார்வைக் கோளாறுகள் நீங்கும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். எனவே, உடலியல் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் இருப்பதை உணர முடியும்.
இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள், ஆயில் புல்லிங் செய்து வருவதால் நோயின் தன்மை குறைந்து, மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
