பாப்கார்னை டைம் பாஸ்க்காக சாப்பிட்டாலும் அதிலிருக்கும் நன்மைகள் தெரியுமா?

திரை அரங்கு சென்றாலே இடை வேளையில் நமக்கு ஞாபகம் வருவது  பாப்கார்ன்  தான். 

பாப்கார்னை வெறும் சூட்டில் பொறிப்பது மட்டுமே போதுமானது. இதுவே ஆரோக்கியமானதும். ஆகையால் இதனை ஆலிவ் ஆயில் மற்றும் வேறு எண்ணெய் மூலம் பொரிப்பதை தவிர்த்திடுங்கள்.

பாப்கார்னில் நார்ச்சத்து,பாலிபீனாலிக் கூறுகள் வைட்டமின் பி காம்ப்லெஸ் , மாங்கனீசு , மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜென்னேற்றி .

பாப்கார்ன் என்பது ஒரு முழு தானியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். மற்ற தானியங்களான அரிசி, கோதுமை போன்றவற்றின் குணநலன்களை பெற்றிருக்கும். பாப்கார்னின் தவிட்டில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும்.

நார்ச்சத்து அதிகம்

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடலில் இயக்கங்கள் சீராக இருக்கும். மென்மையான குடல் திசுக்கள் மற்றும் செரிமான புலன்களால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கும். இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.

தானியங்களின் மூலம் கிடைக்கப்படும் நார்ச்சத்துகள் இரத்த குழாய்களிலும் தமனியிலலும் படிந்திருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. அதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதன்மூலம், இதய நோய், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கப்படுகிறது. இரத்த குழாய்களிலும் தமனிகளில் இரத்தம் சீராக பாய்வதால், இதயத்திற்கு எந்த வொரு அழுத்தமும் ஏற்படுவதில்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு...!

நார்ச்சத்து மிகுந்த உணவின் மற்றொரு பயன்பாடு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது. அதிக அளவில் நார்ச்சத்து உடலில் இருக்கும்போது, இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவின் வெளியீடு மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக இயக்குகிறது. இத்தகைய சிறப்பான நிர்வாகம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் தேவைப்படும். ஆகையால் இந்த நார்ச்சத்து மிகுந்த உணவு நம் அனைவருக்கும் அவசியம் தேவையான ஒன்று.

பசியை தூண்டும் ஹார்மோன் சுரக்காமல் தடுக்கிறது.இதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் கூட இதனை உட்கொள்ளலாம்.

பாப்கார்ன் என்பது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி தான்.ஆனால் அதில் உப்பு, வெண்ணை , சீஸ் போன்றவற்றை சேர்க்காமல் சுவைப்பது சிறந்தது.பதப்படுத்தப்பட்ட பாப்கார்னை உண்பது நல்ல விளைவுகளை கொடுக்காது.