புது மாப்பிள்ளையான இந்தியக் கடற்படை வீரர் நீல் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புஷ் அப் செய்து அசத்தி இருக்கிறார்.

திருமணமான இந்திய கடற்பனை வீரர் ஒருவருக்கு சக வீரர்கள் வாள் வணக்கம் வைத்து சிறப்பு வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்தியக் கடற்படை வீரரான லெப்டினன்ட் நீல் மற்றும் பார்வதி ஆகியோரின் திருமணம் அண்மையில் நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீல் உடைய சக கடற்படை வீரர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் சிறிய வீடியோவை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். “இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் நீல் மற்றும் பார்வதி திருமணம் செய்துகொண்டனர். புதிய மணமக்களை படைவீரர்கள் அவர்களுக்கே உரிய முறையில் வரவேற்கிறார்கள். மிகவும் அருமை!” என்றும் கோயங்கா குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 10ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டு வருகிறது. 68 ஆயிரம் பேர் வரை இந்த வீடியோவை பார்த்து இருக்கிறார்கள்.

Scroll to load tweet…

இந்த வீடியோ பற்றி கருத்து தெரிவித்துள்ள ஒருவர், “என் மகன் இந்திய கடற்படையில் தளபதியாக இருந்தபோது இதை நானும் பார்த்திருக்கிறேன். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த வீரர்கள் சில கடினமான உடற்பயிற்சிகளைச் செய்துகாட்டச் சொன்னார்கள்” என்று தெரிவித்தார்.

“அற்புதம். முக்கியமானவர்களுக்கு முன் திறமையை நிரூபித்துக் காட்டுகிறார்” என்று மற்றொருவர் பாராட்டி இருக்கிறார்.

Harsh Goenka, Indian Navy, Welcoming the Bride, ஹரிஷ் கோயங்கா, இந்திய கடற்படை, கப்பற்படை, திருமண வரவேற்பு