ஹேப்பி பில்ஸ் மாத்திரை..! "PUB"களில் நடக்கும் அதிர்ச்சி..! கொலை மிரட்டலும் கூட...

சென்னையில் பெருகி வரும் "PUB" களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருவதற்கு பின்னணியில் மிகப்பெரிய பேராபத்து ஒளிந்திருக்கும் விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு வந்து தங்களது கல்லூரிப் படிப்பை தொடர்கின்றனர் மாணவர்கள். 

குறிப்பாக இதில் பெண்கள் பப் வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். எதற்கும் ஓர் எல்லை உண்டு என்று சொல்வார்கள். ஆனால் இதுபோன்று PUB களுக்கு செல்லும் பெண்கள் தங்களுடைய எல்லைமீறி நடந்துக்கொள்ளும் ஒரு விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. 

ஆனால் இதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹேப்பி பில்ஸ்  எனப்படும் ஓர் மாத்திரையை பப் வரும் பெண்களுக்கு ஆண் நண்பர்களாலும் ஒரு குறிப்பிட்ட கும்பலாலும் மதுபானத்தில் கலந்து கொடுக்கப்படுகிறது. இல்லையென்றால் அவர்களுக்கு இந்த மாத்திரை பற்றி விளக்கம் அளித்து, பின்னர் அனுமதியுடன் கொடுக்கிறார்கள். இதனால் போதை தலைக்கேறுவதால் என்ன செய்வது என்றே தெரியாமல் பாலியல் உறவில் ஈடுபடும் அளவிற்கு சென்று விடுகிறது.

இதுபோன்ற சம்பவங்களுக்கு பல பெண்கள் அடிமையாகவும் பலரும் பல சிக்கலில் மாட்டி தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்வதாகும் ஒரு செய்தி நிறுவனம் சமீபத்தில் விவரமாக செய்தியை வெளியிட்டிருந்தது. இப்படி ஒரு சம்பவங்களுக்கு மூளையாக செயல்படும் மிக முக்கிய மூன்று நபர்கள் குறித்தும் பேசத் தொடங்கியுள்ளனர். அது பிரபல இசையமைப்பாளர் ஒருவரும், அரசியல் வாரிசு, பிரபல நடிகையும் என இவர்கள் மூவரும்  முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்ற பேச்சும் தற்போது அடிபட்டு வருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்ல முன் வந்தாலும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதும் அப்படியே சொன்னாலும் பெயர் கெட்டுப் போகும் என்ற பயத்தில் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.