குரு பகவானுக்கு "இந்த ராசியினர்" விரதம் இருந்தால்... இப்படியொரு மாற்றம் வருமாம்...! 

பொதுவாகவே குருபகவானுக்கு வியாழக்கிழமை தான் மிகவும் உகந்தது. இந்த நாளில் விரதம் இருந்தால்  வேண்டியது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கில மாதம்  3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், புனர்பூசம். பூரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிறந்தவார்கள் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் வியாழக்கிழமையன்று கோவிலுக்கு சென்று விரதம் இருப்பது நல்லது  

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை வியாழக்கிழமைகளில், அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து தூய்மையாக மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து பூஜை அறையில் தட்சிணாமூர்த்தியின் படத்தை பார்த்து வணங்க வேண்டும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் வைத்து வணங்கினால் மிகவும் சிறந்தது. பின்னர் விளக்கு தீபம் ஏற்றி சர்க்கரை பொங்கல் கற்கண்டு ஆகியவற்றை வைத்து படைக்கலாம்.

ஒரு சிலருக்கு ஜாதகத்தில் குரு பகவானின் நிலை சரியில்லாமல் இருந்தால் அதிலிருந்து மீண்டு நல்ல பலன்களை பெறுவதற்கு ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு சென்று பூஜை மற்றும் யாகங்களில் கலந்து கொள்ளலாம். திருவாரூர் மாவட்டத்திலுள்ள இந்த கோவிலுக்கு பெரும்பாலானோர் வருவது உண்டு.

அதேபோன்று குருபகவானுக்கு யானை தான் வாகனம். எனவே உங்கள் வீட்டின் அருகே உள்ள கோவில்களில்  யானைகளுக்கு தேவையான பழங்களை கொடுத்து தோஷத்தை நீக்கி கொள்ளலாம்.இவ்வாறு செய்வதால் பல எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மைறை எண்ணம் பிறக்கும்