திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன்  குடித்துவிட்டு வந்ததால் தாலிகட்டிய சில நிமிடங்களிலேயே மணப்பெண் கணவனை தூக்கி எறிந்துள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம்  பரேலியைச் சேர்ந்த  இளம்பெண்,  தன்னுடன் கல்லூரியில்  படித்த இளைஞரை காதலித்து வந்தார்.  இந்நிலையில்  இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.  இதில் இருவருக்கும் உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் தடபுடலாக நடந்து முடிந்தது.  அதனையடுத்து

 

நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்கள் நடனமாடி மகிழ்ச்சியாக இருந்தனர்,  அப்போது மணமகனையும்  நடனம் ஆட அழைத்தனர்.  நடனமாடும் நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னர், நடனமாட முன்வந்த  மணமகன் தள்ளாடியபடி பாம்பு டான்ஸ் ஆடினார் இதை கவனித்த  மணமகள்.  மணமகன்  வித்யாசமாக ஆடுவதை கண்டு சந்தேகம் அடைந்தார், பின்னர்  அருகில் வந்த பார்த்ததில்  மனமகன்  மது அருந்திவிட்டு போதையில் நடனம் ஆடுவது தெரிந்தது.  இதனால்  ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மணமகள்  திருமணமான அன்றுகூட குடித்துவிட்டுதான் வருவியா.?  என்று கேட்டு தன் கழுத்திலிருந்த மாலையை கழட்டி வீசி,  நீ எனக்கு வேண்டாம் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறி தகராறு செய்தார்.  இதில் கோபம் அடைந்த மணமகன் திடீரென மணமகளின் மீது பாய்ந்து தாக்க முயன்றார்.  இதனால் திருமண வீடு ரணகளம்ஆனது. 

இதையடுத்து தகவலறிந்த போலீஸார் திருமண வீட்டுக்கு வந்து இருதரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆனால் மணப்பெண் உறுதியாக இருந்ததால் மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுத்த பொருட்கள் நகை பணம் உள்ளிட்ட இவைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்ட சென்றனர் திருமணமான ஒரு சில  நிமிடங்களில் தம்பதியர் பிரிந்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.