சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராம்கி என்ற நபருக்கும், மதுரையை சேர்ந்த தமிழ்மொழி வர்மேல் என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்துள்ளது

சிங்கப்பூரில் பணி புரிந்து வரும் ராம்கி, பெண்ணின் புபிகைப்படத்தை மட்டுமே பார்த்து உள்ளார். தற்போது லீவ் எடுத்து திருமணத்திற்காக தமிழகம் வந்துள்ளார்.பின்னர் தான் மணம் முடிக்க இருந்த பெண்ணை பார்க்க அவரது இல்லத்திற்கு சென்று உள்ளார். சிறிது நேரம் அந்த பெண்ணுடன் உரையாடி விட்டு மதுரை கோவிலுக்கு சென்று வரலாமே என்று விருப்பம் தெரிவிக்க, அந்த பெண் வர மறுத்துள்ளார்.

ஏன் ? என காரணம் கேட்க தொடங்கிய ராம்கிக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.. அதாவது தான் பெரியார் கொள்கைகளை கடைப்பிடிப்பவர் என்றும், கடவுள் பக்தி எல்லாம் கிடையாது எனவும் அந்த பெண் கூறியதாக தெரிகிறது. ஆனால் ராம்கியோ கடவுள் நம்பிக்கை கொண்டவர். எனவே இந்த சின்ன விஷயத்திலேயே ஒத்து வரவில்லையே என ஆழ்ந்த யோசனையில் இருந்த ராம்கியிடம் எத்தனையோ முறை சமாதானமாக பேசி பார்த்து  உள்ளனர் இரு வீட்டாரும்.

ஆனாலும், அவருக்கு எப்படி சொல்லியும் சமாதானம் அடைவதாக தெரியவில்லை. மாறாக இந்த திருமணமே வேண்டாம் என வந்த வேகத்தில் சிங்கப்பூருக்கே திரும்பி உள்ளார் ராம்கி. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.