தன்னலமற்று வேலை செய்பவர்களை கவுரவப்படுத்தும் "கூகுள்..! இன்றைய டூடுல் உடனே செக் பண்ணுங்க ..! 

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தன்னலமற்று சேவை ஆற்றி வரும் மருத்துவர்களும் செவிலியர்களும், தூய்மைப்பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அவர்களை கவுரவப்படுத்துவதற்காகவும் கூகுள் தனது இணையதள முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு உள்ளது 
 
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிரமாக பணிப்புரியும் மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், கூகுள் தனது இணையதள முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.


அந்த வகையில் முன்னணி தேடுபொறி இணையதளமாக கூகுளும் மருத்துவப் பணியாளர்களை கவுரப்படுத்தியுள்ளது.அதன் படி கூகுள், தனது இணையதள முகப்பு பக்கத்தில் வெளியிட்ட டூடுலில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை கவுரப்படுத்தும் விதமாக 
மாஸ்க், தலையுறை அணிந்த மருத்துவப் பணியாளரை போன்று டிசைன் செய்யப்பட்டு உள்ளது

அதே வேளையில் இன்று இரண்டு விதமான டூடுல் வெளியாகி உள்ளது. அதில் ஆசியா மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் மருத்துவர்களை கவுரவிக்கும் பொருட்டும், மற்ற நாடுகளில் மளிகை தொழிலாளர்களை கவுரப்படுத்தியும் டூடுல் வெளியிடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பொது சுகாதார ஊழியர்கள், அவசர சேவை ஊழியர்களுக்கும், காவலர் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்களின் சேவைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக டூடுல் வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களும் மருத்துவர்கள் செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.