தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூகுளின் பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் ஸ்மார்ட் ஃபோன்கள் இந்திய ஸ்டோர்களில் நாளை களமிறங்குகின்றன.

கூகுளின் பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் ஸ்மார்ட் ஃபோன் நாளை இந்திய ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகின்றது. இது அலுமினியம் மற்றும் கண்ணாடி ஃபிரேமில் கருப்பு, சில்வர் மற்றும் நீலம் என மாடர்ன் கலர்களில் இந்திய ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகின்றது. 

கூகுள் பிக்சல் 32ஜிபி இன்டர்னல் மெமரியும், பிக்சல் எக்ஸ்எல் 32ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரியும் கொண்டதாக உருவாக்கப்பட்டு உள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 8 மெகா பிக்சல் முன் கேமரா, 12.3 மெகா பிக்சலில் பின் புற கேமரா மற்றும இதன் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பம்சம் 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் வரை தாங்கக்கூடிய பேட்டரி திறன் காெண்டது. 

கூகுள் பிக்சல் 32-ஜிபி-யின் விலை: ரூ 57,000, கூகுள் பிக்சல் 128 ஜிபி-யின் விலை :ரூ 66,000. கூகுள் பிக்சல் எக்ஸ்எல் 32-ஜிபி-யின் விலை:ரூ 67,000, கூகுள் பிக்சல் எக்ஸ்எல்-128ஜிபி-யின் விலை:ரூ 76,000 என இந்திய ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகின்றது.

ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனத்தில் இதன் முன்பதிவு கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.