தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் மீட், ஜி மெயில், கூகுள் ட்ரைவ் ஆகியன முடங்கியது. இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டுமே நிலவுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறிது நேரத்திலேயே 10 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கூகுளின் திடீர் பிரச்சனை காரணமாக #YouTubeDOWN #googledown ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

இதேபோல் கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதன் காரணமாக பயனர்களால் யூடியூப் வீடியோ தளத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூகுளின் ஒட்டுமொத்த பயனாளர் தளங்களும் ஒரே நேரத்தில் செயல்படாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கும் என்றும், அவரை விரைவில் சரி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனிடையே ஏராளமான பயனாளர்கள் தங்களது பிரச்சனைகளை ஸ்கிரீன் ஷாட்  உடன் ட்விட்டரில் பகிர ஆரம்பித்துள்ளனர்.