தங்கத்தின் அதிரடி விலை உயர்வுக்கு காரணம் இதோ ....!!!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்றிரவு மோடி அறிவித்ததை தொடர்ந்து, தாங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, கட்டு கட்டான நோட்டுகளை, தங்க கடைகளில் கொடுத்து , அதிகளவில் தங்கம் வாங்கியுள்ளனர் பலர்.
இதன் மூலம் , கணக்கில் வராத தொகை, நகையாக மாறியுள்ளது என்று தான் கூற வேண்டும்........
ஒரே இரவில் தங்கத்தின் விற்பனை அதிகரித்ததாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்பாலும் , தங்கத்தின் விலையில் தொடர் முனேற்றம் காணப்படுகிறது.
மேலும், அமெரிக்க தேர்தலை பொறுத்தவரையில், தற்போது , ட்ரம்ப் அதிபராகி உள்ளதால் , முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் இல்லை என தெரிகிறது.
இதனை தொடர்ந்து, முதலீட்டாளர்களின் பார்வை , தங்கத்தின் மீது திரும்ப தொடங்கியுள்ளது.....!
