கொரோனா ஊரடங்கின் காரணமாக, தங்க நகை கடைகள் மூடி இருந்த இருந்த நிலையிலும் தற்போது சத்தம் இல்லாமல் 36 ஆயிரத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது தங்கம் விலை.

இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ரூபாய் 35 ஆயிரத்து 928 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம்  தங்கத்தின் விலையானது 4 ஆயிரத்து 491 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த அதிரடி விலை ஏற்றங்களுடன் தான் தற்போது, தங்க நகை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து, நகைக்கடை உரிமையாளர்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில்...

தொடர்ந்து இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்றும், சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள பனிப்போர் தங்க விலை ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அதனால் தங்கத்தின் விலை இன்னும்  உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண முகூர்த்தம் இனி வரும் நாட்களில் அதிகமாக இருப்பதும் தங்கம் விலை மேலும் உயர காரணமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.