Asianet News TamilAsianet News Tamil

சவரனுக்கு ரூ . 40 உயர்வு..! செய்கூலி சேதாரம் சேர்த்து எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது

gold rate hike rs 40 per one savaran
Author
Chennai, First Published Nov 26, 2019, 5:45 PM IST

சவரனுக்கு ரூ. 40 உயர்வு..! செய்கூலி சேதாரம் சேர்த்து எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் இந்த ஒரு தருணத்தில், மாலை நேரத்தில் கிராமுக்கு ரூ.5 குறைந்து உள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது

தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 32 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

gold rate hike rs 40 per one savaran

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 3613 ரூபாயாகவும்,சவரனுக்கு 10 ரூபாய் குறைந்தும் 28 ஆயிரத்து 904 ரூபாய்க்கும் விற்கப்பட்டது

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.5 உயர்ந்து 3618.00 ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 10 பைசா குறைந்து வெள்ளி 47.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios