கடந்த ஒரு மாத காலமாகவே சவரன் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதற்கிடையில் சில நாட்கள் 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. 

மீண்டும் "ஜம்ப்" ஆனது தங்கம் விலை...! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை கண்டு வந்தாலும், நேற்று சற்று அதிகரித்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.3 அதிகரித்து உள்ளது

கடந்த ஒரு மாத காலமாகவே சவரன் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதற்கிடையில் சில நாட்கள் 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கிளம்பி இருந்தது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதிலிருந்து சுமார் 4 ஆயிரம் வரை சவரன் விலை அதிகரித்தது.

பின்னர் கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கி 30 ஆயிரத்திலிருந்து 28 ஆயிரம் வரை குறைந்தது.இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து உள்ளது 

காலை நேர நிலவரப்படி, 

கிராம் ரூ.3583.00 ரூபாயாகவும், சவரனுக்கு 25 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 664 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா அதிகரித்து 50.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.