தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

சவரன் விலை உயர்வு ..! கிராமுக்கு எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சவரன் விலை தொடர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து உள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.6 அதிகரித்து, சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்தும் 29 ஆயிரத்து 384 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 10 பைசா அதிகரித்து வெள்ளி 50.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது