தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
உயர்ந்தது தங்கம் விலை..! சவரன் விலை எவ்வளவு தெரியுமா..?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் இந்த ஒரு தருணத்தில், காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.8 உயர்ந்து உள்ளது
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 32 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர்.
இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 3622.00 ரூபாயாகவும்,சவரனுக்கு ரூ.64 அதிகரித்து 28 ஆயிரத்து 976 ரூபாக்கு விற்கப்படுகிறது
வெள்ளி விலை நிலவரம்
கிராமுக்கு 10 பைசா அதிகரித்து வெள்ளி 48.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated 29, Nov 2019, 11:27 AM IST