தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்த நாள் முதலே ஒவ்வொரு நாளும் தங்கம் மீதான விலை உயர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

அந்த வகையில் இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. மேலும் கூடுதலாக செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 34 ஆயிரம் ரூபாய் ஆகும் என்ற நிலை உருவாகி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமத்து 11 ரூபாய் அதிகரித்து உள்ளது.

காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராம் தங்கம் 11 ரூபாய் உயர்ந்து 3691.00 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 528 ரூபாயாகவும் உள்ளது

வெள்ளி விலை நிலவரம்

கிராமுக்கு 1.30 ரூபாய் உயர்ந்து 51.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.