செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 32 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

மாலை நேரத்திலும் தங்கம் விலை அதிரடி உயர்வு...! விரைவில் 30 ஆயிரத்தை நெருங்க வாய்ப்பு...! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து வருகிறது

பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இதற்கு முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்ததன் மூலம் சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதாவது செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் 34 ஆயிரம் வரை ஆனது.

இந்த நிலையில் மீண்டும் குறைய தொடங்கிய தங்கம் விலை தற்போது 29 ஆயிரத்து தாண்டி விற்பனையாகி வருகிறது. அவ்வாறு பார்த்தால் தற்போதைய நிலவரப்படி செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 32 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 6 ருபாய் அதிகரித்து, சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்தும்,சவரன் 29 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 20 பைசா குறைந்து 49.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது 

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, சவரனுக்கு 64 அதிகரித்து சவரன் 29 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.