மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது.

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை..! சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா ..? 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.3 அதிகரித்து 3883.00 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது.இருப்பினும் சவரன் விலை 31 ஆயிரம் தாண்டி விற்பனை ஆவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 10 பைசா அதிகரித்து 50.30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர் உயர்வு கண்டு வருவதால், பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்து உள்ளனர்