மாலை நேரத்திலும் மளமளவென உயர்ந்த தங்கம் விலை..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.32 அதிகரித்து 3888.00 ரூபாயாகவும், சவரனுக்கு 256 அதிகரித்து 31 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது.

இருப்பினும் சவரன் விலை 31 ஆயிரம் தாண்டி விற்பனை ஆவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.3 அதிகரித்து 3891.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.24 அதிகரித்து 31 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 40 பைசா அதிகரித்து 50.10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.