சரசரவென குறைந்தது தங்கம் விலை...! சவரன் விலை எவ்வளவு தெரியுமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.37 குறைந்து இருந்தது. ஆனால் மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு 18 உயர்ந்தும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, 30 ஆயிரத்து 848 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது.

இருப்பினும் சவரன் விலை 31 ஆயிரம்  நெருங்கி உள்ளதால் இதனுடன் செய்க்கோழி சேதாரம் என சேர்த்து இன்றைய நிலையில் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 34 முதல் 35 ஆயிரம் ருபாய் நிலை உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 2 பைசா அதிகரித்து 49.20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.