சவரன் விலை ஏற்கனவே 33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் அடைந்து இருந்தது. இந்த நிலையில் சற்று குறைந்து 32 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையாகி வருகிறது

சவரன் விலை "சடன் உயர்வு"..! ஒரு சவரன் வாங்க எவ்வளவு ரூபாய் வேண்டும் தெரியுமா..? 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 4071.00 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 56 உயர்ந்து 32 ஆயிரத்து 568 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

சவரன் விலை ஏற்கனவே 33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் அடைந்து இருந்தது. இந்த நிலையில் சற்று குறைந்து 32 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையாகி வருகிறது 

வெள்ளி கிராமுக்கு 1.10 ரூபாய் குறைந்து 49.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி வரும் காலங்களில் அதிக சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாத சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 37 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உள்ளது.