மளமளவென உயரும் தங்கம் விலை...! இவ்வளவு ரூபாயா..? 

வாரத்தின் 2 ஆவது வர்த்தக தினமான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து உள்ளது. 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும்  சில சமயங்களில் விலை சரிந்து காணப்பட்டு வருகிறது.சென்ற மாதம் தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. பின்னர் மீண்டும் சரியத் தொடங்கிய தங்கம் விலை இடையே இடையே அவ்வப்போது குறைந்து விற்பனையாகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கம் வாங்க இது சரியான தருணமா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர்.இந்த நிலையில் தீபாவளி நெருங்குவதால் தங்கம் விலை மெல்ல மெல்ல அதிகரித்து 30 ஆயிரத்தை நெருங்கும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் 

காலை நேர நிலவரப்படி.. 

கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ. 6 அதிகரித்தும் சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்கப்ப்டுகிறது.

வெள்ளி விலை நிலவரம்.. 

கிராமுக்கு 10 பைசா குறைந்து 49.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.