தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலையில் நின்று சிறிய சரிவு ஏற்பட்டு உள்ளது. இருந்த போதிலும் ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்தை கடந்து தான் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீதான இறக்குமதி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கபட்டதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாகவே தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி கிராமத்து 23 ரூபாய் குறைந்துள்ளது. மாலை நேர நிலவரப்படி 7 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.

அதன் படி 

ஒரு கிராம்  தங்கம் 3682.00 ரூபாயாகவும், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்தும்  சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 456 ரூபாய்க்கு விற்பனையானது 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா குறைந்து 52 ரூபாய்க்கு விற்பனையாகிறது..