மாலை நேரத்தில் தங்கம் விலையில் இவ்வளவு மாற்றமா..? 

இன்றைய மாலை நேர நிலவரப்படி சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து உள்ளது.

கடந்த 3 நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு மாத காலத்தில் குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்த உடன் சவரன் 30 ஆயிரத்தை தாண்டி சவரன் விலை இருந்தது. 

பின்னர் மீண்டும் படிப்படியாக குறைந்து சவரன் விலை 28 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. தீபாவளிக்கு நெருங்க உள்ள தருணத்தில் நாளுக்கு நாள் சவரன் விலை அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.7 குறைந்து, சவரனுக்கு 56 ரூபாய் குறைந்தும் , சவரன் 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 10 பைசாஅதிகரித்து, 49.90 ரூபாய்க்கு விற்பனையாகிறது