சரசரவென குறைந்து விட்டது தங்கம் விலை ..!  இன்றே வாங்கிடலாமா தங்கம்..?
 
தங்கத்தின் மீதான விலை ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து காணப்பட்டு வந்தாலும் சவரன் விலை 29 ஆயிரத்திலிருந்து குறைந்தபாடில்லை... இருந்தாலும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.23 குறைந்து உள்ளது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.23 குறைந்து 3635.00 ரூபாயாகவும், சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 80  ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 1.40 பைசா குறைந்து வெள்ளி 47.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது ஒரு சவரன்  விலை 29 ஆயிரம் என்ற நிலை உள்ளதால், பொதுமக்கள் இன்று தங்கம் வாங்க சற்று ஆர்வம்  காண்பித்து உள்ளனர்.