Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாளில் மளமளவென குறைந்த தங்கம் விலை..!

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

gold rate down as on  6th nov 2019
Author
Chennai, First Published Nov 6, 2019, 12:00 PM IST

ஒரே நாளில் மளமளவென குறைந்த தங்கம் விலை..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று உயர்ந்தும் சில  நேரங்களில் சற்று குறைந்தும்   காணப்பட்டு  வந்தது. இந்த நிலையில்  இன்று  ஒரே நாளில் கிராமுக்கு 34 ரூபாய் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

gold rate down as on  6th nov 2019

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.34 குறைந்து 3658.00 ரூபாயாகவும், சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கும் விற்பனையாகிறது 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 1.20 பைசா குறைந்து வெள்ளி 49.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது 

Follow Us:
Download App:
  • android
  • ios