தற்போதைய  நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால்  ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மாலை நேரத்தில் மளமளவென குறைந்த தங்கம் விலை..! 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.8 குறைந்து 3848.00 ரூபாயாகவும், மாலை நேர நிலவரப்படி ரூ.11 குறைந்து 3837.00 ரூபாயாகவும் உள்ளது. அதன் படி சவரன் 30 ஆயிரத்து 784 ரோபாய்க்கு விற்கப்படுகிறது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை மெல்ல மெல்ல உயர தொடங்கியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது. மேலும் தற்போதைய நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 20 பைசா குறைந்து 49.40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.