Asianet News TamilAsianet News Tamil

சரசரவென குறைந்த தங்கம் விலை...! சவரன் எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.

gold rate down as on 26th nov 2019
Author
Chennai, First Published Nov 26, 2019, 12:41 PM IST

சரசரவென குறைந்த தங்கம் விலை...! சவரன் எவ்வளவு ரூபாய் தெரியுமா..? 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் இந்த ஒரு தருணத்தில் கிராமுக்கு ரூ.10 குறைந்து உள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. 

gold rate down as on 26th nov 2019

தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 31 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 3613 ரூபாயாகவும்,சவரனுக்கு 10 ரூபாய் குறைந்தும் 28 ஆயிரத்து 904 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 10 பைசா குறைந்து வெள்ளி 47.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios