தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு பிறகு சவரனுக்கு 2500 ரூபாய் வரை அதிகரித்து ஒரு சவரன் ரூபாய் 29 ஆயிரத்தையும் கடந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் சவரன் விலை எப்போது ஏறினாலும் குறைந்தது 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை ஒரே நாளில் அதிகரிக்கிறது. ஆனால் விலை குறையும்போது கிராமுக்கு 4 ரூபாய் முதல் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்ற அளவிலேயே குறைகிறது.

இவ்வாறு நாளுக்கு நாள் தங்கத்தின் மீதான விலை உயர்வு ஏறு முகத்திலேயே காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் தங்கம் வாங்குவது என்பது கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகவே கருதப்படுவதால் எவ்வளவு விலை உயர்ந்தாலும் தங்கம் வாங்குவது மட்டும் நிறுத்த முடியாத ஒரு சூழல்தான் நிலவுகிறது.

இந்த நிலையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கத்தின் விலையை பொருட்படுத்தாமல் எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு வாங்கி செல்கின்றனர் மக்கள். ஆனால் அவ்வாறு தங்கம் வாங்கி செல்லும்போது பெரும் திருப்தியாக தான்  செல்கின்றனர். காரணம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் விலை 26 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது. இதனுடன் செய்கூலி சேதாரம் என சேர்த்து ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 29 ஆயிரம் முதல் 30 ஆயிரத்திற்குள் முடிந்துவிடும்.

ஆனால் தற்போது 22 காரட் ஆபரணத் தங்கம் 29 ஆயிரத்து 30 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் இருப்பதால் இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் வாங்க குறைந்தது 34 முதல் 35 ஆயிரம் ரூபாய் ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் செய்கூலி சேதாரம் கூட... 

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராம் ரூ.38 உயர்ந்து 3718 ரூபாயாகவும்,சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையானது.

மாலை நேர நிலவரப்படி 

கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து 3685.00 ரூபாயாக உள்ளது 

வெள்ளி விலை நிலவரம் 

30 பைசா குறைந்து 49.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.