ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சவரனுக்கு இன்று எவ்வளவு ரூபாய் குறைந்து உள்ளது தெரியுமா..? 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சவரன் விலை தொடர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருவதால் விரைவில் 30 ஆயிரத்தை நெருங்க வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது 

அதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்த பிறகு தங்கம் விலையும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அதன் விளைவாக 27 ஆயிரம் ரூபாய் இருந்த சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் மீண்டும் சற்று குறைந்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சவரன் விலை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.3 குறைந்து சவரனுக்கு ரூ.24 அதிகரித்து, 29 ஆயிரத்து 312 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 49.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.