Asianet News TamilAsianet News Tamil

சர்ருன்னு குறைந்த தங்கம் விலை..! சவரன் இப்ப எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

வாரத்தின் இரண்டாவைது வர்த்தக தினமான இன்று சவரன் விலை சற்று குறைந்து உள்ளது.

gold rate down as on 22nd oct 2019
Author
Tamil Nadu, First Published Oct 22, 2019, 1:04 PM IST

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சில நேரங்களில் உயர்ந்தும் சில நேரங்களில் விலை குறைந்தும் விற்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் சவரன் விலை மீண்டும் 30 ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

gold rate down as on 22nd oct 2019

அதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில்இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்த பிறகு தங்கம் விலையும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அதன் விளைவாக 27 ஆயிரம் ரூபாய் இருந்த சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் மீண்டும் சற்று குறைந்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சவரன் விலை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

gold rate down as on 22nd oct 2019

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.10 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.80 குறைந்து, 29 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்பனையானது

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் 30 பைசா குறைந்து வெள்ளி 49.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios