தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 31ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர்.

மீண்டும் சரசரவென குறைந்த தங்கம் விலை..! சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..? 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் இந்த ஒரு தருணத்தில் கிராமுக்கு ரூ.17 குறைந்து உள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.

தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 31ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 3637 ரூபாயாகவும்,சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 96 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 10 பைசா குறைந்து வெள்ளி 48.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.