Asianet News TamilAsianet News Tamil

சரசரவென குறைந்த தங்கம் விலை..! மாலை நேரத்தில் இவ்வளவு குறைவா..?

கிராமுக்கு ரூ.5 குறைந்து,சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 256 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்று மட்டும்  சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து உள்ளது.

gold rate  down as on 21st  oct 2019
Author
Chennai, First Published Oct 21, 2019, 4:53 PM IST

சரசரவென குறைந்த தங்கம் விலை..! மாலை நேரத்தில் இவ்வளவு குறைவா..? 

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று சவரன் விலை சற்று குறைந்து உள்ளது. 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சில நேரங்களில் உயர்ந்தும் சில நேரங்களில் விலை குறைந்தும் விற்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் சவரன் விலை மீண்டும் 30 ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

அதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில்இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்த பிறகு தங்கம் விலையும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அதன் விளைவாக 27 ஆயிரம் ரூபாய் இருந்த சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் மீண்டும் சற்று குறைந்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சவரன் விலை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

gold rate  down as on 21st  oct 2019

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.4 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.32 குறைந்து, 29 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனையானது

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.5 குறைந்து,சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 256 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்று மட்டும்  சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து உள்ளது.
 
வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் 20 பைசா அதிகரித்து வெள்ளி 49.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios