கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை கண்டு வந்தாலும், நேற்று சற்று அதிகரித்த நிலையில் இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து உள்ளது.   

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை கண்டு வந்தாலும், நேற்று சற்று அதிகரித்த நிலையில் இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒரு மாத காலமாகவே சவரன் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதற்கிடையில் சில நாட்கள் 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கிளம்பி இருந்தது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதிலிருந்து சுமார் 4 ஆயிரம் வரை சவரன் விலை அதிகரித்தது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டுமென்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 32 முதல் 33 ஆயிரம் ஆகும் நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கி 30 ஆயிரத்திலிருந்து 28 ஆயிரம் வரை குறைந்தது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 4 ரூபாய் குறைத்து, சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து உள்ளது. 

காலை நேர நிலவரப்படி, 

கிராம் ரூ. 3611.00 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 888 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.11 குறைந்தும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்தும் விற்பனையாகிறது. அதன்படி பார்த்தால் சவரன் ரூ.28 ஆயிரத்து 800 க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா குறைந்து 50.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.