தங்கம் விலை மீண்டும் சரிவு...! இப்ப தங்கம் வாங்குவது சரியா...?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 31 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர்.

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 3636 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 192 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.7 குறைந்து 3629.00 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 32 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 10 பைசா குறைந்து வெள்ளி 47.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து சவரன் விலை 29 ஆயிரத்தை தாண்டி தான் உள்ளேதே தவிர குறைந்த பாடில்லை. எனவே எப்போது தங்கம் விலை குறையும்..? எப்போது தங்கம் வாங்கலாம்..? என்ற எதிர்பார்ப்பில் இருப்பதை விட, தவிர்க்க முடியாத நிலையில் தங்கம் வாங்குவதே சிறந்தது.