அடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..! எவ்வளவு ரூபாய் தெரியுமா..? 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சில நேரங்களில் உயர்ந்தும் சில நேரங்களில் விலை குறைந்தும் விற்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் சவரன் விலை மீண்டும் 30 ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது 

அதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில்இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்த பிறகு தங்கம் விலையும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அதன் விளைவாக 27 ஆயிரம் ரூபாய் இருந்த சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் மீண்டும் சற்று குறைந்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சவரன் விலை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 3668 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.11 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.88 குறைந்து, 29 ஆயிரத்து 256 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா குறைந்து  49.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.