தங்கம் வாங்க முந்துங்கள்..! மாலை நேரத்திலும் சவரன் விலை சரசரவென குறைவு..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.13 குறைந்து 3911.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து  31 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.9 குறைந்து 3902.00 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை தாண்டியும் விற்பனையாகி வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 பைசா குறைந்து 50.20  ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.