தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. 

மாலை நேரத்தில் மளமளவென குறைந்த தங்கம் விலை..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 3649 ரூபாயாகவும், சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 192 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.11 குறைந்து 3638.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.88 குறைந்து 29 ஆயிரத்து 104 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 30 பைசா குறைந்து வெள்ளி 47.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.