தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

குறைந்தது தங்கம் விலை..! சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..? 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கத்தின் மீதான விலை ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து காணப்பட்டு வந்தாலும் சவரன் விலை 29 ஆயிரத்திலிருந்து குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சவரனுக்கு ரூ.32 ரூபாய் குறைந்து உள்ளது 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 3618 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் கறந்து, 29 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 20 பைசா குறைந்து வெள்ளி 47.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.