கடந்த இரண்டு வார காலமாகவே ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பனையானதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தங்கம் விலை குறைந்தால் மட்டுமே தங்கம் வாங்குவது குறித்து சிந்திக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இருந்த போதிலும் தவிர்க்க முடியாத சில காரணத்தினால் தங்கம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்போது விலை உயர்வை பொருட்படுத்தாமல் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டு உள்ளது.

அதன் படி,

22 கிராம் ஆபரண தங்கம் கிராம் ரூ. 3587.00 (- 20 ரூபாய் குறைவு), சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.3 ரூபாய் வீதம் சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 20 பைசா குறைந்து 47.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.