Asianet News TamilAsianet News Tamil

தங்கம் விலை அநியாயத்திற்கு உயர்வு..! மக்கள் தவியோ தவிப்பு ..

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது. 

gold  rate decreased as per the evening
Author
Chennai, First Published Jun 25, 2019, 5:51 PM IST

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கடும் உயர்வு கண்டு வருவதால், பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி மீண்டும் உயர்வை கண்டு உள்ளது.

அதன் படி, காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து 3,308 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்து, 26 ஆயிரத்து 464 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது மாலை நேர நிலவரப்படி, கிராமிற்கு ரூ.5 குறைந்து 3303 ரூபாயாக உள்ளது. 

gold  rate decreased as per the evening

கடந்த 5 ஆண்டுகளில், இல்லாத அளவிற்கு சென்ற வாரம் ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1000 அதிகரித்து, சவரன் ரூபாய் 26 ஆயிரம் கடந்து இருந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இன்றும் தங்கம் விலை அதிகரித்து சவரன் 27 ஆயிரம் ரூபாய் தொட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  
வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி கிராம் 10 காசுகள் குறைந்து 41.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios