இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என  சேர்த்து 37 ஆயிரம் ஆவதால் பொதுமக்கள் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி சேர்த்து சவரன் விலை 38 ஆயிரம்..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று சவரனுக்கு ரூ.56 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.32 குறைந்து 4132.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ. 25 அதிகரித்து 4157.00 ரூபாயாகவும், சவரனுக்கு 200 அதிகரித்து 33 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

ஆக இன்று மட்டும் 56 ரூபாய் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து 48.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 37 ஆயிரம் ஆவதால் பொதுமக்கள் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை உயர காரணம் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.